Right click dissable

Monday, November 7, 2011

இன்றய யாதார்த்தம்....!!!


"ஆணாய் பிறந்தாலே
ஆளப்பிறந்தவன்" என
ஆசை ஆசையாய்
நெஞ்சோடு சேர்த்து
நெஞ்சம் மகிழ்ந்தவளே..! - நீ
நினைவிழக்கும் தருணத்தில்,
நினைவிருந்தும் வரவில்லை உன் மகன் !


"சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை"யென்று
சாதம் ஊட்டும் போதும்
சாதனை படைக்கும்போதும்
இறுமாப்பாய் கூறியவளே - உன்
இறுதிச் சடங்குக்கு
இதுவரைக்கும் வரவில்லை !


"கடைசி வரை
சோறு போடுபவன் அவனல்லவா"
என கண்ணாய் வளர்த்த உனக்கு
கடைசிநேர வாய்க்கரிசி போட
காத்திருந்தும் வரவில்லை !


வேலை கிடைக்க வேண்டி
விரதம் இருந்து
விளக்கேற்றி
வீதி வழி வந்தவளை
வீதியில் எடுத்துச்செல்ல
விரைந்து   வர மனமில்லை !


தொண்டைக்குழிக்குள்
தொடாத வானமாய் அங்கே அவன்....!


உன் உடலதனை
உண்மையாகத் தாங்கிய பூமியாய்
இங்கே இவள்.


(நன்றி  அவள்)

Friday, March 18, 2011

உனக்கான என் பக்கம்...!

  உன் பெயரிலையே அதிஷ்டத்தை 
கொண்டவளே...!
உன் மெளனச் சிரிப்பினிலும்
அகன்ற விழிப்பார்வையிலும் 
நான் சிக்கித் தவிக்கிறேன்...!

இப்பொழுதெல்லாம் 
உன்னைவிட கனவுகளைத் தான்
அதிகம் நேசிக்கின்றேன்..!
அதில் மட்டும் தானே என்னோடு 
நீ பேசிக்கொள்கிறாய்.....! 

முதன்முறை நினைத்தேன் 
உயிர் வரை இனித்தாய்..!
மறுமுறை நினைத்தேன்
இதயத்தில் வலித்தாய்..!

என்னைவிட நல்லதோர் 
வாழ்க்கை துணை கிடைத்தால் 
என்னை நீ மறப்பாய்..!
இல்லையேல் நிச்சயம் 
என்னை நீ நினைப்பாய்..!